இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்

 

இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்



நாடுகாண் பயணங்களின் விளைவாக 1498 ஆம் ஆண்டு போர்த்துக்கேய இனத்தவரான வஸ்கொடகாமாஉள்ளிட்ட குழுவினர் இந்தியாவை வந்தடைந்தமை ஆசிய வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும் . இப்பயணத்தின் பின்னர் போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் , பிரான்சியர் போன்றோர் வெவ்வேறுகாலகட்டங்களில் இந்தியாவுக்கு வருகை தந்து அங்கு கரையோரப் பிரதேசங்களில் தமது ஆதிக்கமுகாம்களைக் கட்டியெழுப்பினர் . மேற்குறிப்பிட்ட ஐரோப்பியர்களுள் இந்தியாவில் நிலையான அரசியல்அதிகாரத்தை நிலைநாட்டியவர்கள் ஆங்கிலேயர் ஆவர் . இவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டதன் மூலம்முழு இந்தியாவிலும் தமது அதிகாரத்தைப் பரப்பி அதனை பிரித்தானியாவின் குடியேற்ற நாடாக்கிக்கொண்டனர் . இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிராக 19 ஆம் நூற்றாண்டின் பின்னரைப்பகுதியில்தேசிய சுதந்திர இயக்கமொன்று ஆரம்பிக்கப்பட்டதோடு அடுத்த நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் அது தீவிரதேசியவாத இயக்கமொன்றாக வளர்ச்சியடைந்தது . பல்வேறு மொழிகளைப் பேசும் , பல்வேறு இனங்களைச்சேர்ந்த இந்தியர்கள் தமது தாய் நாட்டின் விடுதலைக்காகத் தேசிய உணர்வுடன் ஒன்றுபட்டு எழுந்து நின்றமைஇந்திய சுதந்திரப் போராட்டத்தின் விசேட பண்பொன்றாகும் . இக்காரணங்களால் அது ஏனைய ஆசியக்குடியேற்ற நாடுகளின் சுதந்திர இயக்கங்களுக்கு முன்மாதிரியாய் அமைந்தது . இந்த அத்தியாயத்தில் இந்தியாமீதான ஐரோப்பியரின் தாக்கம் , ஆங்கிலேயர் இந்தியாவில் ஆதிக்கத்தை நிலைநாட்டுதல் , இந்திய சுதந்திரப்போராட்டத்தின் இயல்புகள் மற்றும் அப்போராட்டத்தில் முன்னின்று உழைத்த தலைவர்கள் பற்றிக் கூடியகவனம் செலுத்தப்படுகின்றது . 



 இந்தியாவில் ஐரோப்பியரின் செல்வாக்கு 


போர்த்துக்கேயரின் இந்திய வருகையின் பின்னர் இந்து சமுத்திரத்தை அண்டி அதுவரையில் இடம்பெற்று வந்தஅராபியரின் வர்த்தக நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டன . போர்த்துக்கேயருக்குப் பின் ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் மற்றும் பிரான்சிய இனத்தவர்கள் இந்தியாவுக்கு வருகை தந்ததன் காரணமாக வியாபார நடவடிக்கைகள் மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்குதல் தொடர்பில் ஐரோப்பியர் மத்தியில் மோதல்கள்எழுந்தன . அச்சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய இனத்தவர்கள் சிலர் இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களில்வர்த்தகக் களஞ்சியசாலைகளை அல்லது கோட்டைகளை நிறுவியிருந்தமையால் அவரவர்களுக்கிடையேஏற்பட்ட மோதல்கள் இந்தியா மீதும் பாதிப்பை ஏற்படுத்தின . ஆசியாவிற்கு வந்த ஆரம்ப காலப்பகுதியில்வர்த்தகத்தால் இலாபமீட்டுதல் , மதத்தைப் பரப்புதல் போன்றவற்றில் ஐரோப்பியரின் முக்கிய கவனம்இருந்திருந்தாலும் ஐரோப்பியர் மத்தியில் மோதல்கள் ஏற்பட்டதோடு அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்குவதில்அவரவர்களுக்கிடையே தீவிர ஆர்வமொன்று ஏற்பட்டது . இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைநிலைநாட்டுவதில் ஆங்கிலேயர் ஏனைய ஐரோப்பியர்களை விடவும் முன்னணியில் திகழ்ந்தனர் . அதன்விளைவாக இந்தியா பிரித்தானியாவின் குடியேற்ற நாடானது . 


போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர் , ஆங்கிலேயர் , பிரான்சியர் ஆகியோரின் இந்திய வருகை 


வஸ்கொடகாமா இந்தியாவுக்கு வந்த காலப்பகுதியில் அந்நாட்டில் அரசியல் ஒருமைப்பாடொன்றுகாணப்படவில்லை . தெற்கில் நிலவிய விஜயநகரப் பேரரசைத் தவிர நாட்டுக்குள் பல பிரதேசங்களில்சிற்றரசுகள் காணப்பட்டன . அதேபோன்று இந்தியாவின் கரையோரப் பிரதேசங்களிலும் கள்ளிக்கோட்டை , கோவா போன்ற சிற்றரசுகள் சிலவற்றைக் காணமுடிந்தது . இவ்வரசுகளுக்கிடையே ஒருமைப் பாடொன்றுகாணப்படாமை போர்த்துக்கேயர் இந்தியாவின் கரையோரப் பிரதேசங்கள் பலவற்றில் தமது ஆதிக்கத்தைநிலைநாட்டிக் கொள்வதற்கு உதவியாய் அமைந்தது . 1509 ஆம் ஆண்டில் கீழைத்தேய போர்த்துக்கேய அரசப்பிரதிநிதியாக நியமனம் பெற்றுவந்த அல்போன்ஸ் டி அல்பகூர்க் இந்தியாவிலும் மற்றும் இந்து சமுத்திரவலயத்திலும் போர்த்துக்கேய ஆதிக்கம் பரவலடைவதற்கு பாரிய சேவையாற்றி யுள்ளார் . 1510 இல்கோவாவைக் கைப்பற்றி அதனைக் கீழைத்தேய போர்த்துக்கேய மத்திய நிலையமாக்கிக் கொண்டதுடன் இந்துசமுத்திரத்தில் போர்த்துக்கேய வர்த்தக ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்அடுத்து வந்த காலப்பகுதிகளில் இந்தியாவின் பல பிரதேசங்களில் போர்த்துக்கேயர் தமது ஆதிக்கத்தைநிலைநாட்டினர் . எவ்வாறாயினும் கரையோரப் பிரதேசங்கள் தவிர்ந்த நாட்டின் உள்ளகப் பகுதிகளில்ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவர்களால் இயலவில்லை . எனினும் கோவாவை மத்திய நிலையமாகக்கொண்டு நூற்றாண்டுக்கு மேலான காலம் இந்து சமுத்திரத்தில் வர்த்தக ஏகாதிபத்தியத்தைத் தமதாக்கிக்கொண்டனர் .


இந்தியக் கரையோரப் பிரதேசங்களில் நிலவிய போர்த்துக்கேயரின் ஆதிக்கத்திற்கு எதிராக முதல் தடவையாகஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டது ஒல்லாந்தர்களாலேயாகும் . 1602 ஆம் ஆண்டு ஒல்லாந்து கிழக்கிந்திய வர்த்தகக்கம்பனியை உருவாக்கிக் கொண்டு ( VOC ) இந்து சமுத்திரத்திற்கு பலம் வாய்ந்த கப்பற் படையொன்றைஅனுப்புவதற்கு ஒல்லாந்தர் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் . ஒல்லாந்தரின் வருகையோடு வர்த்தகம்மற்றும் அரசியல் அதிகாரத்தைப் பரப்புவதில் போர்த்துக்கேயருடன் மோதல்கள் ஏற்பட்டன . ஒல்லாந்தரின்கவனம் முதலில் வாசனைத் திரவியங்கள் அதிகம் விளையும் தென்கிழக்காசியப் பிரதேசங்கள் மீது திரும்பியது . அந்நாடுகளிலிருந்து போர்த்துக்கேயரை விரட்டியதன் பின் அவர்களின் கவனம் இந்தியா மீது திரும்பியது . போர்த்துக்கேயரின் ஆதிக்கத்தைப் பரவலாக்குவதற்கு அல்பகூர்க் நடவடிக்கை மேற்கொண்டது போல , ஆசியாவில் ஒல்லாந்தரின் ஆதிக்கத்தைப் பரப்புவதில் பீட்டர் சேர் கூன் எனும் ஒல்லாந்த இனத்தவனின் பாரியஉதவி கிட்டியது . இதற்கமைய இந்தியாவில் குஜராத் , வங்காளம் , ஒரிஸா , பீகார் போன்ற பிரதேசங்களில்ஒல்லாந்தர் ஆதிக்கம் பரவியது . 



பிரித்தானியாவைத் தமது தாயகமாகக் கொண்ட ஆங்கிலேயர் , பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியைநிறுவிக் கொண்டு 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆசியா வுக்கு வருகை தந்தனர் . ஆரம்ப காலப்பகுதியில்ஜாவா , சுமாத்ரா போன்ற பிரதேசங்கள் மீது ஆங்கிலேயரின் கவனம் திரும்பினாலும் ஒல்லாந்தருடன் ஏற்பட்டமோதல்களை அடுத்து அவர்களது கவனம் இந்தியா மீது திரும்பியது . ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வரும்போதுஅங்கு பலம் வாய்ந்த பேரரசாக மொகலாயப் பேரரசு விளங்கியது . இதன் காரணமாக மொகலாயப் பேரரசனானஜஹாங்கீரின் அனுமதியுடன் 1613 ஆம் ஆண்டு அவர்கள் சூரத்தில் வர்த்தகக் களஞ்சியசாலையொன்றைநிறுவினர் . இவ்வாறு அடுத்த டுத்த காலப்பகுதிகளில் இந்தியாவில் அகமதாபாத் , ஆக்ரா , சென்னை போன்றபல பிர தேசங்களில் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதில் ஆங்கிலேயர் வெற்றியீட்டினர் . இங்கிலாந்தின்மன்னன் 2 ஆம் சார்ள்ஸ் போர்த்துக்கேய இளவரசியான கத்தரினை நன்கொடையாக ஆங்கிலேயரிடம்கையளித்தனர் . திருமணம் செய்து கொண்டதன் விளைவாக போர்த்துக்கேயர் தம்வசமிருந்த மும்பாயைபிரான்சியரின் கவனம் இந்தியா மீது திரும்பியது ஏனைய ஐரோப்பியரின் வருகையின் பின்னராகும் . 1664 ஆம்ஆண்டு பிரான்சிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியை நிறுவிக் கொண்ட பிரான்சியர் , 1668 ஆம் ஆண்டில்இந்தியாவுக்கு வருகை தந்து சூரத்தில் வர்த்தகக் களஞ்சியசாலையொன்றை நிறுவிக் கொண்டனர் . அதன்பின்பாண்டிச்சேரி , காரைக்கால் , சந்திரநாகூர் போன்ற பல பிரதேசங்களில் பிரான்சியக் கோட்டைகள் 


மொகலாயப் பேரரசு


மொகலாயப் பேரரசுக்கான அத்திபாரம் பாபர் எனும் ஆட்சியாளனால் இடப்பட்டது . 1526 ஆம் ஆண்டில் வடபல இந்தியப் பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டபின் அங்கு தனியானதொரு ஆட்சி நிறுவப் பட்டது . பாபரின்பேரனான மகா அக்பர் மொகலாய அரசை பேரரசொன்றாக மாற்றினான் . 1556 - 1605 வரையான காலப்பகுதியில் ஆட்சியாளனாக விளங்கிய அவன் வட இந்தியா வின் பாரிய பிரதேசமொன்றுக்கு தனதுஅதிகாரத்தைப் பரவலாக்கினான் . அக்பரின் பின் ஆட்சிக்கு வந்த ஜஹாங்கிர் மற்றும் சாஜஹான் போன்றஅரசர்களும் சிறந்த மொகலாயப் பேரரசர்கள் ஆவர் . மன்னன் சாஜஹான் தாஜ்மஹால் என்னும் சிறப்பு வாய்ந்தகட்டடத்தைக் கட்டுவித்தான் . அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஒளரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில்மொகலாயப் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது .



Previous
Next Post »